வழக்கிலிருந்து தப்பினார் உதயநிதி ஸ்டாலின் – உச்ச நீதிமன்றம் உத்தரவு..!
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான இரு தேர்தல் வழக்குகளை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து எம்.எல்.ஏ.ரவி என்பவர் வழக்க தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. பின்னர் இந்த இரு வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு மீது நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில் இரு தேர்தல் வழக்குகளையும் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





