குப்பை வண்டியில் கொண்டு செல்லப்பட்ட இலவச வேட்டி மற்றும் சேலைகள்..!
திருவள்ளூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ள வேஷ்டி, சேலைகள் குப்பை வண்டியில் ரேஷன் கடைக்கு கொண்டு செல்லப்பட்டதால் அதிர்ச்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்பட்டுள்ள வேஷ்டி மற்றும் சேலைகள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளுக்கு வட்டாட்சியர் செல்வம் தலைமையில் வேட்டி மற்றும் சேலைகள் வழங்கப்பட்டது. இதில் ஒரு சில ரேஷன் கடைகளுக்கு குப்பை வண்டியில் வேட்டி சேலைகள் கொண்டு செல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





