--- --:--:-- --

கணவரை காப்பாற்ற தன் உயிரை கொடுத்த பிரபல நடிகை..!

7

தேசிய நெடுஞ்சாலையில் ஓய்வெடுக்க நின்று கொண்டிருந்த பொழுது கணவரை தாக்கிய கொள்ளையர்களை தடுக்க முயன்ற நடிகை சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த நடிகை ரியாகுமாரி தனது குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது நெடுஞ்சாலையோரம் காரை நிறுத்திய பொழுது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் நடிகையின் கணவரிடம் இருந்து பொருட்களை கொள்ளையடிக்க முயன்றனர்.

 

கணவர் மீது கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதால் ரியாகுமாரி அதனை தடுக்க முயன்றுள்ளார். அப்பொழுது கொள்ளையர்கள் நடிகை ரியாவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

 

இதில் படுகாயம் அடைந்த நடிகை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

 

Right Menu Icon