சல்மான்கான் கண்முன்னே ரசிகர்கள் மீது போலீஸ் லத்தி சார்ஜ்..!
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக மும்பையில் உள்ள அவரது வீட்டின் முன்பு அவரது ரசிகர்கள் குவிந்தனர்.
இதனையடுத்து சல்மான் கான் வீட்டில் பால்கனியிலிருந்து கையை அசைத்து ரசிகர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டார். அப்பொழுது கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.





