கணவன் இறப்பை தாங்க முடியாமல் மனைவியும் உயிரிழந்த சோகம்..!
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் 78 வயதான டேனியல் பாலகிருஷ்ணன். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். அவருடைய இறுதி சடங்கில் உறவினர்கள் பங்கேற்றனர்.
கணவனின் உடல் அடக்கம் செய்யப்பட்ட பிறகு மனைவி வெண்ணிலா கடும் வேதனையிலிருந்து உள்ளார். சில மணி நேரங்களிலேயே வெண்ணிலாவும் உயிரிழந்து போனார்.
தொடர்ந்து கணவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டு கல்லறை அருகே மனைவி வெண்ணிலாவும் புதைக்கப்பட்டார். இவரும் தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.





