--- --:--:-- --

மதுரை ஏர்போர்ட்டில் ஹிந்தியில் பேசச் சொல்லி என் பெற்றோரை அதிகாரிகள் துன்புறுத்தினார்கள் : சித்தார்த்

7

துரை விமான நிலையத்தில் தனது பெற்றோரை ஹிந்தியில் பேச சொல்லி நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததாக நடிகர் சித்தார்த் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

மதுரை விமான நிலையம் வந்த வயதான தனது பெற்றோரின் உடைமையை சிஐஎஸ்எப் வீரர்கள் சோதனை செய்ததாக தெரிவித்துள்ளார்.

 

அப்பொழுது பெற்றோர் ஆங்கிலத்தில் பேச முற்பட்ட பொழுது தங்களிடம் ஹிந்தியில் தான் பேச வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தியதாகவும், கூட்டமே இல்லாத மதுரை விமான நிலையத்தில் 20 நிமிடங்கள் பெற்றோரை காத்திருக்க வைத்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

 

Right Menu Icon