--- --:--:-- --

தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு..!

8

மிழகத்தில் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்க கடல் பகுதிகளின் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகையிலிருந்து 470 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இதன் காரணமாக நாளை 25ஆம் தேதி தூத்துக்குடியில், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 26 ஆம் தேதி கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தென்மேற்கு வங்க கடல் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகள் தமிழக கடலோர பகுதிகள் குமரி கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று வீசப்படும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
.

Right Menu Icon