--- --:--:-- --

குமுளியில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தந்தை, மகனுக்கு அமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல்..!

1

குமுளி மலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தந்தை மற்றும் மகனை அமைச்சர் பெரியசாமி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

 

கடந்த ஓரிரு நாட்களுக்கு முன் சபரிமலைக்கு சென்று திரும்பும் பொழுது குமுளி மலைச்சாலை விபத்தில் ஆண்டிபட்டியை சேர்ந்த எட்டு பேர் உயிரிழந்தனர்.

 

விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அவரவர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பணி நடைபெற்றது. விபத்தில் காயமடைந்த ராஜா மற்றும் அவரது மகன் ஹரிஹரன் ஆகியோர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon