குடும்பத் தகராறில் மனைவியை அடித்து கொன்ற கணவன்..!
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே குடும்பத் தகராறில் மனைவியை அடித்து கொன்ற கணவனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தம்பதி இருவருக்கும் இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது ஆத்திரத்தில் மனைவியை கணவன் அடித்து கொன்றுவிட்டு தப்பியுள்ளார்.
தகவல் அறிந்து வந்த திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் லதாவின் உடலை மீட்டு கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பியோடிய நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.





