தடுப்பூசி போட்டதால் பச்சிளம் குழந்தை உயிரிழந்ததாக குற்றச்சாட்டு..!
திண்டுக்கல் அருகே தடுப்பூசி போட்டதால் பச்சிளம் குழந்தை உயிரிழந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டிய நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விஜயகுமார் – சுகன்யா தம்பதிக்கு 45 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த நிலையில் குழந்தைக்கு தடுப்பூசி போட்டு மூக்கிலிருந்து ரத்தம் வந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பொழுது அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து குழந்தையை வாங்க குழந்தையின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்து ஆத்தூர் வட்டார மருத்துவ அலுவலர் பொறுப்பு ஆனந்த் ஈஸ்வரிடம் கேட்டதற்கு தடுப்பூசி போட்ட மற்ற குழந்தைகள் நலமாக உள்ளதாகவும் தடுப்பூசியால் இந்த குழந்தை இறக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





