--- --:--:-- --

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 600 சிறப்பு பேருந்துகள்..!

5

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 600 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கிறிஸ்துமஸ் புத்தாண்டு நெருங்கியுள்ளதாலும் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்படுவதாலும் வெளியூர்களில் பணி செய்யும் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

 

சென்னையில் இருந்து திரளானோர் சொந்த ஊர்களுக்கு செல்வர் என்பதால் சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

 

அதன்படி வெள்ளிக்கிழமையில் வழக்கமாக செல்லும் பேருந்துகளிடம் கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகள் வெளியூர்களுக்கு இயக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையிலிருந்து 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon