டிசம்பர் 27இல் கோவை வருகிறார் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா..!
பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா வரும் 27ஆம் தேதி கோவைக்கு வருகை தர உள்ளார். இந்த பயணத்தின் பொழுது வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கு தயாராவது குறித்து பாஜக நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்த இருப்பதாக தெரிகிறது.
இதற்கு முன்பு கடந்த செப்டம்பர் மாதம் இரண்டு நாள் பயணமாக ஜே.பி நட்டா தமிழகம் வந்திருந்தார். அதைத் தொடர்ந்து மிக விரைவில் அவர் மீண்டும் தமிழகம் வருவது அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





