--- --:--:-- --

சசிகலா புஷ்பா வீட்டை சூறையாடிய மர்ம நபர்கள்..!

1

தூத்துக்குடியில் பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் சசிகலா புஷ்பா வீட்டின் கண்ணாடிகளை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்ததால் சலசலப்பு ஏற்பட்டது. முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும் பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவருமான சசிகலா புஷ்பா தூத்துக்குடியில் வசித்து வருகிறார்.

 

இந்நிலையில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் வீட்டை அடித்து நொறுக்கி கார் மற்றும் வீட்டின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியுள்ளனர். தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த பாரதிய ஜனதா கட்சியில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்.

 

பின் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்வதாக உறுதியளித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon