--- --:--:-- --

லாரியின் சக்கரத்தில் சிக்கிய சிறுவன் சம்பவ இடத்திலேயே பலி..!

15

சென்னை அடுத்த ஓஎம்ஆர் சாலையில் தண்ணீர் லாரி மோதிய விபத்தில் அரசு பள்ளி மாணவர் உயிரிழந்தார். சரவணன் உடைய மகன் ஹரிஹரன். அதே பகுதியில் உள்ள அரசு நடன நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறான்.

 

இன்று காலை பள்ளிக்கு செல்லும் பொழுது பழைய மாமல்லபுரம் சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சிறுவன் வருவதை கவனிக்காமல் லாரி ஓட்டுநர் லாரியை இயக்கியுள்ளார். இதில் சிறுவன் சக்கரத்தின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon