--- --:--:-- --

அரசு பள்ளிகளுக்கு முன்னாள் மாணவர்கள் உதவும் நம்ம ஸ்கூல் திட்டம் தொடக்கம்..!

1

தமிழகத்தில் அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கான நம்ம ஸ்கூல் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அரசு பள்ளிகளில் பயின்று தற்பொழுது உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள் அரசு பள்ளிகளின் உட்கட்ட அமைப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகள் சுகாதார சேவைகளை மேம்படுத்த நிதி உதவி செய்யும் வகையில் தமிழக அரசு நம்ம ஸ்கூல் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

 

சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்காக நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.

 

இதன் தலைவராக வேலூர் ஸ்ரீனிவாசன் மற்றும் தூதுவராக விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் அரசு பள்ளிகளில் மேம்படுத்தும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என்றார்.

 

தனது சொந்த நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாயை இந்த திட்டத்திற்காக வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின் அனைவரும் அரசு பள்ளிகளின் மேம்பாட்டிற்கு தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்வில் நடிகர் சிவகுமார், கிரிக்கெட் வீரர் நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon