பணியின் பொழுது நடனமாடிய நான்கு பெண் போலீஸ் சஸ்பெண்ட்..!
உத்திரபிரதேச மாநிலத்தில் பணியின் பொழுது சினிமா பாடலுக்கு நடனம் ஆடி இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நான்கு பெண் போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மூன்று பெண் போலீசார் நடனமாடியதனை மற்றொரு பெண் போலீசார் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டார்.
வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வைரலானதையடுத்து பணியின் போது நடனமாடி இணையத்தில் பதிவிட்ட நான்கு பெண் போலீசாரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





