--- --:--:-- --

நோயாளியின் உறவினரை ஒருமையில் திட்டிய செவிலியர்..!

5

கூடலூர் அரசு மருத்துவமனையில் நோயாளியின் உறவினரிடம் பெண் செவிலியர் ஒருமையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

 

நீலகிரி மாவட்டம் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கூடலூரை சேர்ந்த ஒருவர் தன் தாயின் சிகிச்சைக்காக அவரை அழைத்து சென்றுள்ளார். அப்பொழுது பணியில் இருந்த செவிலியரிடம் பனி மருத்துவர் எப்போது வருவார் என அந்த நபர் கேட்டதாக தெரிகிறது.

 

அவருக்கு முறையாக பதில் தராமல் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அவரை செவிலியர் ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அலுவலரிடம் பிரவீனிடம் கேட்ட பொழுது வீடியோவை பார்த்தவுடன் சம்பந்தப்பட்ட செவிலியரை அழைத்து எச்சரித்ததோடு அவரை பணி மாற்றம் செய்து நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்தார்.

 

 

Right Menu Icon