ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் டிசம்பர் 24 மற்றும் 31 ஆம் தேதிகளில் நடைபெறும்..!
மாண்டஸ் புயல் மற்றும் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் 24 மற்றும் 31 ஆகிய தேதிகளின் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் காரணமாக அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் கடந்த 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
இந்த நிலையில் டிசம்பர் ஒன்பதாம் தேதி நடைபெற இருந்த தேர்வு டிசம்பர் 24ஆம் தேதி நடத்தப்படும் என்றல் டிசம்பர் 10ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வு டிசம்பர் 31ஆம் தேதி நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் நடைபெறும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.






