--- --:--:-- --

யோகி பாபு பட விவகாரம்.. நிர்வாணமாக்கி அடித்து உதைத்தார்களா?

21

யோகி பாபு நடிப்பில் உருவான திரைப்படம் ஷூ. இப்படத்தை கார்த்திக் என்பவர் தயாரித்துள்ளார். இப்படத்தின் ஓடிடி, டிஜிட்டல் மற்றும் வெளிமாநில உரிமையை தயாரிப்பாளர் கார்த்திக் என்பவரிடம் இருந்து ரூ. 1 கோடியே 10 லட்சத்திற்கு விநியோகஸ்தர் மதுராஜ் வாங்கியுள்ளார்.

 

இதற்கு, முன் பணமாக ரூ. 20 லட்சத்தை மட்டுமே தயாரிப்பாளர் கார்த்திக்கிடம் கொடுத்துள்ளார் மதுராஜ். மீதமுள்ள பணத்தை படத்தின் வெளியீட்டுக்கு பின் இரண்டு தவணைகளாக தருகிறேன் என்று மதுராஜ் கூறியுள்ளாரம்.

 

ஆனால், ஷூ திரைப்படம் மிகப்பெரிய தோல்வியடைந்த காரணமாக படத்தை வாங்க யாரும் முன் வராத காரணத்தினால் தயாரிப்பாளருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார் மதுராஜ்.

 

இதனால், மதுராஜின் அலுவலகத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் புறப்பட்டு சென்றுள்ளார் தயாரிப்பாளர் கார்த்தி. அலுவலகத்தில் இருந்த கோபி கிருஷ்ணா மற்றும் பென்சர் இருவரையும் கடத்தி சென்று நிர்வாணமாக்கி, சித்திரவதை செய்து மதுராஜிடம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது.

 

மதுராஜ் தனது மனைவியின் பிரசவத்திற்காக மதுரைக்கு வந்துள்ளதாக கூறியுள்ளார். இதனால் கடத்தி வந்த இருவரிடம் இருந்தும் ATM கார்டுகளை பறித்து அதிலிருந்து ரூ. 70 ஆயிரம் பணத்தை எடுத்துள்ளனர். இதன்பின் இருவரையும் வெட்டி, தாம்பரம் பகுதியில் கண்ணை கட்டி இறக்கிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon