--- --:--:-- --

கரடி தாக்கியதில் இருவர் படுகாயம்..!

27

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கரடி தாக்கியதில் இருவர் படுகாயம் அடைந்தனர். ராமப்பனும், அவரது மனைவி சீதமாய் விவசாய தோட்டத்தில் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்பொழுது வழிமறித்த கரடி ஒன்று அவர்களை தாக்கியது.

 

இருவரும் வழி தாங்க முடியாமல் கதறவே கரடி அங்கிருந்து சென்றது. தகவலறிந்து வந்த உறவினர்கள் இருவரையும் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆத்தூர் வனத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon