காணாமல் போன குழந்தை கிணற்றில் சடலமாக மீட்பு..!
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே காணாமல் போன ஒன்றரை வயது பெண் குழந்தை வீட்டிற்கு அருகே உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டது. கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் தனது பெண் குழந்தையுடன் சிலுக்குவார் பட்டியில் உள்ள குடியிருப்பில் தங்கியிருந்தார்.
வெள்ளிக்கிழமை மாலை குழந்தை ரித்திகா மாயமான நிலையில் சனிக்கிழமை காலை வீட்டிற்கு அருகில் இருந்த தரை கிணற்றில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார். குழந்தை தவறி விழுந்திருக்கலாம் என கூறப்படும் நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





