பிஎஸ்எல்விசி 54 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது..!
ஒன்பது செயற்கை கோள்களுடன் பிஎஸ்எல்விசி 54 ராக்கெட் நாளை விண்ணில் பாய உள்ளது. இஸ்ரோ சார்பில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை காலை 11:56 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்த ராக்கெட் உடன் ஒரு புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் மற்றும் சிறிய நான்கு செயற்கைக்கோள் ஏவப்படுகிறது.
நான்கு நிலைகளைக் கொண்ட பிஎஸ்எல்விசி 54 ராக்கெட் ஒவ்வொரு நிலையும் தனித்தனியாக செயல்படும் திறன் கொண்டது. முதல் மற்றும் மூன்றாவது நிலைகளில் திட எரிபொருளும் இரண்டாவது மற்றும் நான்காவது நிலைகளில் திரவ உந்து சக்தியும் பயன்படுத்தப்படுகிறது.






