--- --:--:-- --

சபரிமலை என்ற பெயரை பயன்படுத்தக்கூடாது : கேரள உயர்நீதிமன்றம் கண்டனம்..!

9

பரிமலை பெயரை பயன்படுத்தி விளம்பரம் செய்த ஹெலிகாப்டர் சேவை நிறுவனத்திற்கு கேரள உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

 

கேரளாவில் கொச்சியிலிருந்து சபரிமலைக்கு ஹெலிகாப்டர் சேவை வழங்குவதாக நிறுவனம் சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்தது. விஐபி தரிசனம் செய்வது வரை அனைத்துக்கும் 45 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிப்பதாக அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது.

 

இந்த விளம்பரத்தை கண்ட கேரளா உயர்நீதிமன்றம் தாமாக முழுவதும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. தேவசம்போர்ட்டில் அனுமதி இன்றி சபரிமலைக்கு ஹெலிகாப்டர் விளம்பரம் செய்த தனியார் நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் சபரிமலை என்ற பெயரை பயன்படுத்தக்கூடாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

 

Right Menu Icon