--- --:--:-- --

தலைமை ஆசிரியரை தாக்கிய மாணவர் இடைநீக்கம்..!

4

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பள்ளி தலைமை ஆசிரியரை தாக்கிய பள்ளி மாணவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கண்டமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர் ஒருவர் சக மாணவிகளை கிண்டல் செய்துள்ளார்.

 

இதனை தட்டிக் கேட்ட பள்ளி தலைமை ஆசிரியரை அந்த மாணவர் கூர்மையான ஆயுதத்தால் தலையில் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த ஆசிரியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

 

குறிப்பிட்ட மாணவர் மீது பெண்களை கேலி செய்தல் மற்றும் அரசு ஊழியரை தாக்குதலும் இரண்டு பிரிவுகளின் கீழ் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மாணவரை பள்ளியில் இருந்து இடை நீக்கம் செய்து மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

Right Menu Icon