காதல் துரோகத்தால் தற்கொலை செய்து கொண்ட காதலன்..!
உத்திர பிரதேசத்தில் காதல் துரோகம் செய்ததை பொறுக்க முடியாத இளைஞர் facebook நேரலையில் வீடியோ எடுத்தபடி கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் facebook நேரலையில் வீடியோ எடுத்தபடி இளைஞர் ஒருவர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் இளைஞர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான விசாரணையில் காதலித்த பெண்ணிற்கு அவரது வீட்டில் வேறொரு நபருடன் திருமணம் செய்து வைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்ததாகவும் அதற்கு காதலியும் சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் மனவேதனை அடைந்த இளைஞர் facebook-ல் இளைஞரின் காதலி மற்றும் அவரது குடும்பத்தினரின் பெயரை கூறியபடி கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார். இது வேதனை அடைய செய்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





