ஆய்வுக்கு சென்ற ஆட்சியரின் கார் விபத்தில் சிக்கியது..!
கன்னியாகுமரியில் ஆய்வுக்கு சென்ற ஆட்சியரின் கார் விபத்தில் சிக்கியதில் மாவட்ட ஆட்சியர் நூலிழையில் உயிர் தப்பினார். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்அரவிந்த் தினசரி வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி நேற்று நடுக்கரை ஊராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்துவிட்டு காரில் திரும்பி கொண்டிருந்தார். அப்பொழுது கார்நிலை தடுமாறி அருகில் இருந்த ஓடையில் விழுந்தது.
காரிலிருந்து பத்திரமாக மாவட்ட ஆட்சியர் கீழே இறங்கிய நிலையில் ஊர் மக்கள் காரை மீட்டனர். இந்த விபத்தில் மாவட்ட ஆட்சியர் நூலிழையில் உயிர் தப்பினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





