வரும் 12ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்..!
பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் உறுதி செய்திருக்கும் நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க வரும் 12ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அந்த இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தி தீர்ப்பளித்தது. இதற்கு தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் கூட்டணி கட்சியினரின் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த ஆலோசிக்க வரும் 12ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் குறித்து ஆலோசிக்க முடிவெடுக்கப்பட்டது. சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





