தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் மீது மோதிய வந்தே பாரத் ரயில்..!
குஜராத்தில் தண்டவாளத்தை கடக்கும் முயன்ற பெண் மீது வந்தே பாரத் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். குஜராத்தில் ரயில் நிலையம் அருகே நேற்று தண்டவாளத்தை கடக்க முயன்ற 54 வயது பெண் மீது வந்தே பாரத் அதிவேக ரயில் மோதியது.
இதில் அந்த பெண் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். வந்தே பாரத் ரயில் காந்தி நகரிலிருந்து மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கியது முதல் தொடர்ந்து விபத்தில் சிக்கி வருவது விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





