--- --:--:-- --

எரிவாயு சிலிண்டர் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு..!

6

விருத்தாச்சலம் அருகே வீட்டில் எரிவாயு சிலிண்டர் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள கிராமத்தில் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த பொழுது திடீரென சிலிண்டர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

 

சிலிண்டரில் இருந்து 10 அடி உயரத்திற்கு தீ பற்றி எரிந்தது. வீட்டில் இருந்தவர்கள் அச்சத்தில் அலறியடித்து ஓடினர். இதனால் அந்த பகுதியில் ஏராளமான மக்கள் திரண்ட நிலையில் அவர்கள் செய்வதறியாது தவித்தனர்.

 

அப்பொழுத அங்கு வந்த இளைஞர் துரிதமாக செயல்பட்டு ஈரமான துணியை சிலிண்டர் மீது போட்டு தீயை அணைத்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இளைஞருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

 

Right Menu Icon