உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி லலித் இன்றுடன் ஓய்வு..!
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி லலித் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். உச்ச நீதிமன்றத்தில் 49வது தலைமை நீதிபதியான லலித்துக்கு நேற்று கடைசி நாளாக அமைந்தது.
உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற பிரிவு உபசார நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் முதன் முறையாக வழக்கறிஞர் பணியை உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சந்திர சூட் முன்னிலையில் தொடங்கியதாக தெரிவித்துள்ளார்.
தற்பொழுது அவரது மகன் தலைமை நீதிபதி பொறுப்பை ஒப்படைப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக லலித் சுட்டிக்காட்டினார். உச்சநீதிமன்றத்தில் இரண்டு அரசியல் சாசனத்தை ஒரே நேரத்தில் விசாரணை நடத்துவது அபூர்வம் என்ற சூழலில் தலைமை நீதிபதியாக தனது பணிக்காலத்திலும் மூன்று அரசியல் சாசனத்திற்கு ஒரே நேரத்தில் விசாரணை நடைபெற்று நடைபெற்றதாக நினைவு கூறுகிறார்.






