--- --:--:-- --

டெல்லிக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ்..!

4

காற்று மாசை கட்டுப்படுத்துவதில் அலட்சியமாக இருப்பதாக டெல்லி மாநில அரசுக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து மோசம் அடைந்து வருவதாக காற்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

 

மாநில அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. காற்று மாசால் குழந்தைகள் பாதிக்கப்படுவது தொடர்பாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் டெல்லி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

அதில் டெல்லியில் அபாயகரமான அளவு மாசு இருப்பதால் பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பு கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்தார். இது குறித்து டெல்லி மாநில அரசு எந்த முடிவும் எடுக்காமல் உள்ளதால் காற்று மாசை கட்டுப்படுத்துவதில் மாநில அரசு அலட்சியமாக உள்ளதாக குறிப்பிட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon