பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த முதலமைச்சர் ஸ்டாலின்..!
சென்னையில் மழை நீர் தேங்கிய இடங்களில் உடனுக்குடன் நீர் வெளியேற்றப்பட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை எழிலகத்தில் உள்ள அவசரகால கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
அப்பொழுது மழை பாதிப்பு தொடர்பான புகார்கள் மற்றும் அதன் மீதான தீர்வுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டிருந்தார். சென்னையை சுற்றியுள்ள நீர் தேக்கங்களில் தண்ணீர் இருப்பு, நீர் வெளியேற்றம் தொடர்பாகவும் முதலமைச்சரிடம் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
அப்பொழுது கட்டுப்பாட்டு அறைக்கு வந்து பொதுமக்களின் குறைகளை முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தவர் மழைநீர் தேங்கிய இடங்களில் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




