--- --:--:-- --

சீர்திருத்தங்களுடன் புதிய இந்தியாவை நோக்கி நகர்வதாக மோடி பெருமிதம்..!

2

சீர்திருத்தங்கள், பெரிய உட்கட்டமைப்பு சிறந்த திறனுடன் புதிய இந்தியாவை நோக்கி அமர்வதாக சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

 

கர்நாடகாவில் மூன்று நாட்கள் நடைபெற உள்ள சர்வதேச முதலீட்டாளர்கள் தொடக்க மாநாட்டில் காணொளி வாயிலாக கலந்து கொண்டு பேசிய பிரதமர் அடுத்த 10 ஆண்டுகளில் முதலீட்டாளர்களை ஈர்ப்பது மற்றும் வளர்ச்சிக்கான இலக்குகளை நிர்ணயிப்பது ஆகியவற்றை இலக்காக கொண்டு இந்த மாநாடு நடத்தப்படுவதாக கூறினார்.

 

பல்வேறு சீர்திருத்தங்கள் மூலம் கடந்த ஆண்டு இந்தியா சுமார் 84 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்றதாக அறிவித்தார். பிரதமர் பெருமிதம் தெரிவித்தார்.

 

நமது இளைஞர்களின் திறனை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக புதிய வாய்ப்புகளை மேலும் ஆராய்வதற்கான சூழல் அமைப்பை விளக்குவதாக கூறிய பிரதமர் இந்தியாவின் சாதனைகள் உலகத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குவதாக கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon