--- --:--:-- --

பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு..!

8

ஹிந்தி திணிப்புக்கு எதிராக தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றப்பட்ட தீர்மானம் விளக்க கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அலுவல் மொழி தொடர்பாக நாடாளுமன்ற அறிக்கையைப் பற்றி திமுக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில், நான்காம் தேதி தமிழக முழுவதும் திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இந்த நிலையில் வடக்கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon