லேப்டாப் ஆர்டர் செய்த நபருக்கு பெரிய கல் டெலிவரி செய்யப்பட்ட சம்பவம்..!
பிளிப்கார்ட்டில் லேப்டாப் ஆர்டர் செய்த நபருக்கு பெரிய கல் டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது. அண்மைக்காலமாக ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஆர்டர் செய்த பொருட்களை சம்பந்தமேயில்லாமல் உருளைக்கிழங்கு, பொம்மை கேமரா போன்றவை டெலிவரி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் சுந்தரம் என்பவர் ஆர்டர் செய்துள்ளார். பிளிப்கார்ட் நிறுவனம் பெரிய கல்லை டெலிவரி செய்துள்ளது. டெலிவரி செய்யப்பட்ட பெரிய கற்களை பார்த்து அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் பிளிப்கார்ட் நிறுவன ஊழியரிடம் புகார் அளித்தார்.
வாடிக்கையாளர்களின் புகாரை ஏற்றுக்கொண்ட நிறுவனம் அதற்கான முழுப் பணமும் திரும்ப வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. லேப்டாப் ஆர்டர் செய்த நபருக்கு பெரிய கல் டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் ஆன்லைனில் பொருட்களை வாங்குபவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





