பீர் பாட்டிலை உடைத்து நண்பரை குத்தியவர் தப்பியோட்டம்..!
திருத்தணியில் குடிபோதையில் ஏற்பட்ட மோதலில் பீர் பாட்டிலை உடைத்து நண்பரை குத்தியவர் தப்பியோடினார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வரும் சண்முகம் மற்றும் பாண்டியன் ஆகிய இருவரும் மது அருந்தியுள்ளனர்.
அப்பொழுது தன் மனைவி குறித்து சண்முகம் தவறாக பேசியதால் ஆத்திரமடைந்த பாண்டியன் பீர் பாட்டிலை உடைத்து சண்முகத்தை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடினார். இதில் காயமடைந்த சண்முகம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.





