வெங்காயத்தின் எடைக்கு சமமாக பிறந்த குழந்தை..!
உலகில் அன்றாடம் பல வியக்க வைக்கும் விஷயங்கள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் ஒன்றாக நன்கு வளர்ந்த ஒரு பெரிய வெங்காயத்தின் எடைக்கு சமமான ஒரு குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தான் இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.
இந்த ஆண் குழந்தை தாயின் கருவில் இருக்கும் பொழுது ஆறு மாதத்தில் அதன் வளர்ச்சி தடைபட்டுள்ளது. ஒரு குழந்தை வயிற்றில் இருந்த நான்கு மாதங்களில் முற்றிலும் வளராத நிலையில் இருந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் குழந்தை பிறக்கும் பொழுது வெறும் 268 கிராம் மட்டுமே இருந்துள்ளது.
ஆனால் குழந்தை எந்த உடல்நல பாதிப்பும் இல்லாமல் ஆரோக்கியமாக இருந்துள்ளது. இதைக் கண்டு ஆச்சரியப்பட்ட மருத்துவர்கள் மேலும் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் உயர் அவசர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணித்து உள்ளனர். 6 மாத தொடர் சிகிச்சைக்கு பிறகு தற்போது அந்த குழந்தை 3.2 கிலோ எடை வந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




