இபிஎஸ் தரப்பு எம்எல்ஏக்கள் கூச்சல்..! கடிந்துகொண்ட அப்பாவு..!
இரண்டாவது நாளாக சட்டப்பேரவை இன்று கூடுகிறது. எதிர்க்கட்சித் துணைத் தலைவராக உதயகுமார் நியமனத்தை அங்கீகரிக்க சபாநாயகரிடம் இபிஎஸ் கருத்து தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் சர்ச்சை நீடிக்கும் நிலையில் பேரவையில் இபிஎஸ் ஓபிஎஸ் அருகருகே அமர்ந்துள்ளனர்.
இதனால் இபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் அவையில் கூச்சலிட்டதால் அப்பாவு கடிந்து பேசியுள்ளார். இருக்கைக்கு செல்லாவிட்டால் நடவடிக்கை எடஎடுக்கப்படுமென பழனிசாமி தரப்பு எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கேள்வி நேரம் முடிந்த பிறகு பழனிச்சாமி தரப்பிலிருந்து அனுமதிக்கப்படுவர் எனவும் சபாநாயகர் கருத்து தெரிவித்துள்ளார். இபிஎஸ் தரப்பு எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளியேற்றும் செய்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




