ரஷ்யா பயங்கரவாத நாடு என குற்றம் சாட்டிய உக்ரைன்..!
ரஷ்யா பயங்கரவாத நாடு என ஐநா பொதுச்சபையில் உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. ரஷ்யாவையும் கைப்பற்றி கிரிமியா பகுதியையும் இணைத்து மிக முக்கியமான பாலம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. இதன் பின்னணியில் ரஷ்யா உள்ளதாக குற்றம் சாட்டியது.
இதற்கு பதிலடி தரும் விதமாக உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இதில் 14 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்துள்ளனர். இது குறித்து ஐநா பொதுச்செயலாளர் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஐநா பொதுச் சபை அவசர கூட்டம் தொடங்கியது. இதில் ரஷ்யாவின் தாக்குதல் குறித்தும் உக்ரைனிடம் இருந்து கைப்பற்றிய நான்கு தொகுதிகளை தன்னுடன் இணைத்துக் கொண்டது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. ரஷ்யா பயங்கரவாத நாடு என்று
உக்ரைன் அரசு குற்றம் சாட்டியுள்ளது.





