இந்தோனேஷியாவில் பள்ளி சுவர் இடிந்து விபத்து..!
இந்தோனேஷியாவில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆன்றோ நகரில் உள்ள பள்ளி ஒன்றில் சுவர் இடிந்து விழுந்தது. 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
பள்ளியில் இருந்த மற்ற மாணவர்களை பத்திரமாக மீட்டனர். மேலும் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.





