--- --:--:-- --

உயிரை பறித்த பொய் வழக்கு?! உறவினர் மறியலால் பரபரப்பு : புதுகையை அதிரவைத்த பெண் தற்கொலை! திமுகவினர், போலீசாரே காரணம் என கடிதம்..

fdhdfh

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே, போலீசார், ஆளுங்கட்சியினர் மீது அடுக்கடுக்காக குற்றம்சாட்டி, பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, உறவினர்கள் போராடி வருவதால், பரபரப்பு நிலவுகிறது.

 

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே உள்ளது, மேற்பனைக்காடு கிராமம். இங்கு வசித்து வரும் நீலகண்டன் என்பவர் மனைவி கோகிலா. இவர்களுக்கு 10 வயதுகூட தாண்டாத இரு குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு பாதை தொடர்பான பிரச்சனை இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

 

இந்த விவகாரம் கீரமங்கலம் காவல் நிலையம் வரை சென்று அங்கு விசாரணை நடைபெற்று வந்துள்ளது. காவல் ஆய்வாளர் பாஸ்கர், உள்ளூர் திமுக பிரமுகர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு, நீலகண்டன் – கோகிலா குடும்பத்திற்கு தொடர்ந்த் நெருக்கடி கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், கோகிலாவின் குடும்பம் நிம்மதியின்றி தவித்து வந்துள்ளது.

 

இந்த நிலையில், கடந்த 20ஆம் தேதி கீரமங்கலம் போலீசார், பாதை பிரச்ச்சனை தொடர்பான வழக்கில் கோகிலாவை அதிரடியாக கைது செய்தனர். இதை சற்றும் எதிர்பார்த்திராத கோகிலாவின் குடும்பம் நிலைகுலைந்தது. ஏற்கனவே நொந்து போயிருந்த கோகிலா, கைது நடவடிக்கைக்கு பின்னர், கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

 

இவ்வழக்கில் கோகிலாவுக்கு ஜாமின் வழங்கிய நீதிபதியிடம் ஜாமீனில் விடுதலை பெற்று வந்த கோகிலா தினமும் கீரமங்கலம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதித்து விடுதலை செய்தது. அதன் அடிப்படையில் கீரமங்கலம் காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்துள்ளார்.

 

இந்த நிலையில், திமுக பிரமுகர்கள் கொடுத்து வந்த அழுத்தம் காரணமாக, கோகிலா மீது காவல்துறையினர் தனது பிடியை மேலும் இறுக்கியதாக கூறப்படுகிறது. அதாவது, ஜாமின் கையெடுத்திட வந்த கோகிலாவை, கீரமங்கலம் போலீசார் ஆதரவுடன், திமுக பிரமுகர் குமார் என்பவர் மிரட்டியதாகவும், கொலை வழக்கு பதிவு செய்து திருச்சி சிறையில் அடைப்பேன் என்று எச்சரித்ததாகவும், கோகிலாவின் உறவினர்கள் கூறுகின்றனர்.

 

குமாரின் மனைவி புவனேஸ்வரி, கீரமங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருவதால் மற்ற அதிகாரிகளும் புவனேஸ்வரிக்கு சாதகமாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக, கீரமங்கலம் காவல் ஆய்வாளர் பாஸ்கரன், ஆளுங்கட்சியினர் அல்லது வேண்டப்பட்டவர்களுக்காக பொய் வழக்கு போட்டு மிரட்டுவதில் கைதேர்ந்தவர் என்று ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர்.

திமுக பிரமுகர் குமார்
திமுக பிரமுகர் குமார்

அப்படித்தான், திமுக பிரமுகர் குமாருக்வுக்காக கோகிலாவுக்கு காவல் ஆய்வாளர் மிரட்டல் விடுத்துள்ளார். மீண்டும் மீண்டும் போலீசாரும் ஆளுங்கட்சி பிரமுகரும் நெருக்கடி தருகின்றனரே என்று வேதனையில் இருந்த கோகிலா, கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாக தெரிகிறது. அதன் தொடர்ச்சியாக, குறிப்பிட்ட குடும்பத்தினர் தனது குடும்பத்தினரையும் தன்னையும் மிரட்டி வருவதாகவும் இதனால் தனது நிம்மதி இழந்து விட்டதாக கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கோகிலா தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

 

இந்த சம்பவத்தால் கோகிலாவின் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அறந்தாங்கி – பட்டுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அறந்தாங்கி வட்டாட்சியர் ஆலங்குடி டிஎஸ்பி உள்ளிட்டோரின் தலைமையில், பிரச்சனைக்குரிய பாதை சீரமைக்கப்பட்டது.

 

இந்த பாதை சீரமைக்கப்பட்டது பொதுமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கையாக பாதையை சீரமைக்க வேண்டுமென்ற போது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள், ஆளும் திமுகவினருக்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் உடனடியாக பாதையை சீரமைத்ததாக, அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

 


காலை 5 மணிக்கு எழுப்பி கூட்டிச் சென்றனர்…
கடிதத்தில் என்ன உள்ளது?

 

காவல்துறையினர், திமுக பிரமுகர் குமார் மீது புகார் கூறி, கோகிலா தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன்பு அவர் எழுதி வைத்ததாக கூறப்படும் கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது.

 

அதில், “என் சாவுக்கு காரணம் குமார். அவரது மனைவி புவனா என்ற புவனேஸ்வரி தான் காரணம். செய்யாத தப்புக்காக பொய் கேஸ் ஒன்று தயாரித்து, கீரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்து என்னை, மிகுந்த மன உளைச்சளுக்கு ஆளாக்கி விட்டார்கள். அந்த பொய் வழக்கை என்வென்று விசாரிக்காமல், எஸ்.ஐ ஜெயக்குமார், லேடி போலீஸ் கிரேஜி ஆகிய இருவரும், காலை 5 மணிக்கு நான் தூங்கிக் கொண்டிருந்த போது எழுப்பி, வா ஸ்டேஷனுக்கு என்னை இழுத்துச் சென்றார்கள்.

 

உன்னை கொலை கேசில் அரஸ்ட் பண்ணியிறுக்கிறோம். திருச்சி ஜெயிலில் போடப்போகிறோம் என்று சொன்னார்கள். அதனால் என் கணவர் மிகுந்த  மன உளைச்சலில் பத்து நாட்களாக வீட்டிற்கு வராமல் எங்கே சென்றார் என்று கூட தெரியவில்லை, ஏனென்றால் அவர் மீதும் FIR பதிவு செய்துள்ளனர். சாதரண கேசை, ஸ்டிராங் பண்ணுகிறேன் என்றும், திருச்சி ஜெயிலில் வைக்கிறேன் என்று கூறி விட்டு சென்றார். இதளால் மன உளைச்சலில் நான் சாகிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.


 

Right Menu Icon