செல்போன் கடையில் இருந்த காலாண்டு தேர்வு வினாத்தாள்..!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அரசு தொடக்கப் பள்ளியில் இன்று நடைபெற இருந்த காலாண்டு தேர்வு வினாத்தாள்கள் வத்தலகுண்டில் உள்ள ஒரு செல்போன் கடையில் வைக்கப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொடைக்கானல் அரசு தொடக்கப்பள்ளி நடைபெறும் காலாண்டு தேர்வு வினாத்தாள் கசிந்தது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சம்பந்தபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளனர்.






