--- --:--:-- --

தமிழ்நாட்டில் ஐந்து நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு..!

2

மிழ்நாட்டில் ஐந்து நாட்களுக்கு லேசானது முதல் மிதமான பருவ மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

சென்னை நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இரண்டு நாட்களுக்கு மன்னார்வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகளில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Right Menu Icon