பெண் மீது மின்னல் தாக்கியதில் அவர் உயிரிழப்பு..!
திருச்சுழி அருகே தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெண் மீது மின்னல் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உலக தேவன்பட்டி கிராமத்தை சேர்ந்த முனியசாமி என்பவரின் மனைவி இவர் அதே பகுதியில் உள்ள தனது பருத்திக் காட்டில் விவசாய வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்பொழுது இடி மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்த திருச்சுழி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





