--- --:--:-- --

பள்ளிக்கு செல்ல பயந்து எட்டாம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை..!

9

சேலத்தில் பள்ளிக்கு செல்ல பயந்து எட்டாம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் ஜான்சன் பேட்டை பிள்ளையார் நகர் பகுதியை சேர்ந்த சிவகுரு என்பவரின் மகன் அரசர் ஒரு தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான்.

 

கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பள்ளிக்குச் செல்ல விருப்பமில்லாமல் மாணவன் வீட்டிலேயே இருந்து வந்துள்ளான். பெற்றோர்கள் மகனை சமாதானம் செய்து பள்ளிக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இன்று பள்ளிக்கு செல்ல பயந்த நிலையில் அச்சத்தில் அரசு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

மகன் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடலை பார்த்து கதறி அழுதுள்ளனர். தகவலின் பேரில் வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon