--- --:--:-- --

5 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு..!

4

மிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தெற்கு ஒரிசா பகுதிகளில் நிலவுகிறது.

 

இதன் காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் லேசானது முதல் மிதமான வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சென்னையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. மன்னார்வளைகுடா தென் தமிழக கடலோர பகுதிகள் தென்மேற்கு வங்கக்கடல் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon