பெண்ணுக்கு ஆபாச வீடியோ அனுப்பி பாலியல் தொந்தரவு அளித்த இளைஞர் கைது..!
சென்னையில் பெண்ணுக்கு ஆபாச வீடியோ அனுப்பி பாலியல் தொந்தரவு அளிப்பதுடன் அவரது செல்போன் எண்ணை தவறாக சித்தரித்து முகநூலில் பகிர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
எம்ஜிஆர் நகரை சேர்ந்த சுய தொழில் செய்து வரும் பெண்ணை கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி செல்போனில் தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர் அவரிடம் ஆபாசமாக பேசியும் குறுஞ்செய்தி மற்றும் வீடியோ அனுப்பியும் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படும் நிலையில் புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் பாதிக்கப்பட்ட பெண்கள் வசிக்கும் அதே தெருவில் உள்ள ராஜேஷ் என்பவர் அந்த பெண்ணுடன் முகநூலில் பேச முயற்சி செய்ததாகவும் அதனால் அந்த பெண்ணின் கணவர் எச்சரிக்கை செய்ததாகவும் தெரிகிறது.
இதில் ஆத்திரமடைந்த அவர் பெண்ணுக்கு தொந்தரவு செய்தது தெரியவந்தது. தலைமறைவான ராஜேஷ் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரது மனைவியை வைத்து பேசிய நேரில் வரவழைத்து கைது செய்தனர்.





