இந்தியாவின் உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு மையமாக மாற்ற வேண்டும்..!
இந்தியாவின் உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு மையமாக மாற்ற ஒரே நேரத்தில் பல முனைகளில் பணியாற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். அகமதாபாத்தில் மத்திய மாநில அறிவியல் மாநாட்டை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
இதன் பின் பேசிய பிரதமர் மோடி அறிவியல் தொழில்நுட்பம் தொடர்பான ஆராய்ச்சியில் உள்ளூர் அளவில் கொண்டு செல்ல வேண்டும் வேற்று மாநிலங்களில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் கண்டுபிடிப்பு ஆய்வாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
2015 இல் உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் 81 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. அறிவியல் அடிப்படையிலான வளர்ச்சி என்ற சிந்தனையுடன் மத்திய அரசு செயல்பட்டு வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.






