--- --:--:-- --

ஒரு ரூபாய்க்கு புடவை வாங்க முண்டியடித்த மக்கள்..!

2

கிருஷ்ணகிரியில் ஒரு ரூபாய்க்கு புடவை வாங்கி அதிகாலை முதல் பெண்கள் முண்டியடித்தனர். கிருஷ்ணகிரி சாலையில் அமைந்துள்ள பிரபல ஜவுளி கடையில் முதலாமாண்டு விழாவை முன்னிட்டு முதலில் வரும் 500 வாடிக்கையாளர்களுக்கு ஒரு ரூபாய்க்கு புடவை, ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இலவச கேன்சர் மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

 

இதையடுத்து அதிகாலை முதலே கடை திறப்பதற்கு முன்பு ஏராளமான பெண்கள், முதியவர்கள் கடை வாசலில் காத்திருந்தனர். கடையை திறந்தவுடன் ஒரு ரூபாய்க்கு சேலை மற்றும் பேன்ட் சட்டைகளை வாங்கிச் சென்றனர். கூட்டத்தை கட்டுப்படுத்த 500க்கும் மேற்பட்ட பணியாளர்களை ஜவுளிக்கடை நிர்வாக நியமித்திருந்தது.

 

Right Menu Icon