சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 57 வயது முதியவர்..!
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 57 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த சிறுமி வீட்டில் தனியாக உறங்கிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்பொழுது ஜெயக்கொடி என்ற முதியவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் முதியவரை போக்சோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.





